tamilnadu

img

வேலூர் சிப்பாய் புரட்சி தின 219 ஆவது ஆண்டு விழா

வேலூர் சிப்பாய் புரட்சி தின 219 ஆவது ஆண்டு விழா

வேலூர், ஜூலை 10 – தமுஎகச மற்றும் வேலூர் வாசிப்பு இயக்கம் இணைந்து வேலூர் சிப்பாய் புரட்சியின் 219 ஆவது ஆண்டு விழா வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் பே.அமுதா வரவேற்க, தாளாளர்  ஜோன்சிலின் ராணி துவக்க உரையாற்றினார். வேலூர்  சிப்பாய்புரட்சி குறித்து தமுஎகச முன்னாள் மாவட்ட தலைவர் முல்லைவாசன் அறிமுக உரையாற்றினார். வேலூர் வருவாய் கோட் டாட்சியர் செந்தில்குமார் , தமுஎகச மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பேசினர். சிப்பாய் புரட்சி தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று கள் நினைவு பரிசுகளை வழங்கினர்.முன்னதாக சாரல் இசைக்குழு சார்பில் தேச பக்தி பாடல்களை பாடினர். பொன்விழா நிறைவையொட்டி முன்னாள் மாவட்ட நிர்வாகி கள் கமலாலயன், செந்  தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் கவுரவிக்கப்பட்ட னர். மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஏ.விநாயகம்,லோ.ரஜினிகாந்த், ராணிப் பேட்டை மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஸ்ரீராம் ம.சினேகலதா மற்றும் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செய லாளர் எஸ்.சுரேந்திரன் முடிவில் நன்றி கூறினார்.