tamilnadu

img

6 மாவட்டங்கள் சார்பாக 1709 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் வழங்கல்

6 மாவட்டங்கள் சார்பாக  1709 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் வழங்கல்

வேலூர், அக்.5- தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தின கருத்தரங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ் சந்தா வழங்கும் நிகழ்வு வேலூர் பாகாயம் பகுதியில்  ஞாயிறன்று (அக்.5) நடைபெற்றது. வேலூர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.டி. சங்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பரசுராமன் வரவேற்றார், கடலூர் மாவட்ட செயலாளர் ஜி. மாதவன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் என். சுப்பிர மணி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பி.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் என்.பாண்டி, கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்புரை யாற்றினர்.  இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக 500 சந்தாகளும், விழுப்புரம் மாவட்டம் சார்பாக 400 சந்தாக்களும், வேலூர் மாவட்டம் சார்பாக 259 சந்தாக்களும், திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக 250 சந்தாக்களும், கடலூர் மாவட்டம் சார்பாக 200 சந்தாக்க ளும், ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக 100 சந்தாக்களுமாக மொத்தம் 1709 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது. நிறைவாக வேலூர் தெற்கு வட்டக் குழு உறுப்பினர் டி.முரளி நன்றி கூறினார்.