tamilnadu

img

பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்த 15 மாணவர் அமைப்புகள்

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுப்படுத்த  இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 15 மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து “இந்திய ஐக்கிய மாணவர்கள் அமைப்பு” என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன. கல்வியை காப்பாற்ற வேண்டும் ; புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் ; இந்தியாவை காப்பாற்றுங்கள் ; பாஜகவை நிராகரியுங்கள் என்ற முழக்கங்களுடன் பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ள இந்த ஐக்கிய மாணவர்கள் அமைப்பின் முதல் கூட்டம் தில்லியில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் 2024 மார்ச் 12 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.