tamilnadu

சிறை பிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை

சென்னை,ஜன.27- இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தர விட்டது.

கடந்த 13 ஆம் தேதி புதுக் கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினத்திலிருந்து 3 விசைப்படகு களில் சங்கர், பாதுஷா, குமார், முருகன், சாம்ராஜ், பாலா, அஜித், துரை, நாகசாமி, பாலகிருஷ்ணன், ஜெயராஜ், ஜாக்சன் ஆகிய 12 மீனவர்கள், கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், “இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று நிபந்தனையின் அடிப்படையில், 12 பேரையும் விடு தலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், 3 விசைப் படகுகள் உரிமையாளர்கள் வரும் மார்ச் 11 அன்று ஆவணங்களுடன் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசார ணையை ஒத்திவைத்தார். விடு தலை செய்யப்பட்ட மீனவர்கள் 12  பேரும், யாழ்ப்பாணத்தில் உள்ள  இந்திய துணைத் தூதரக அதி காரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.