tamilnadu

img

காஞ்சிபுரத்தில் 12 மையங்களில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்,மே 22- மத்திய பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து  காஞ்சி புரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில்,  தொழிலாளர் உதவி  ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாநில செயலா ளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் கே.ஜீவா  தலைமையில் ஆலடி தோப்பு  உட்பட நான்கு  மையங்களிலும்,  விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே. நேரு தலைமையில் திருக்காளிமேடு பகுதியிலும், தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்  சார்பில் ஓரிக்கை பணிமனை, பேருந்து நிலைய பணிமனை  என இரு இடங்களி லும், சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் உத்திர மேரூர், மானாமதி என இரு இடங்களிலும், நோபில் டெக் இரும்பு தொழிற்சாலையிலும், திருபெரும்புதூர், படப்பை என காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.