tamilnadu

img

பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின்மைக்கு தீர்வு காண முடியாது வாலிபர் சங்க மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேச்சு

செங்கல்பட்டு,டிச.8 சிறு குறுந் தொழில்களை, பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலையின் மைக்கு தீர்வு காண முடியாது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக இளை ஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சிக்கான மாநில சிறப்பு மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோயிலில் ஞாயிறன்று (டிச. 8) நடைபெற்றது.  மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் பேசியதாவது: வேலையின்மை குறித்து சட்டமன்றம், மக்களவை, மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பேசு பொருளாக மாற்ற வேண்டும். மாதர்சங்கம் நடத்திய நடை பயண பிரச்சாரத்தை அனைத்து ஊடகங்களும் வெளிக் கொண்டு வர வில்லை. இதுகுறித்து விவாதிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகளில் 8 விழுக்காடு பேர் வேலை யில்லாமல் இருக்க வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. அப்படி வேலை யில்லாதவர்கள் இருந்தால்தான் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆள்கிடைப்பார்கள். இந்த 8 விழுக்காடு எண்ணிக்கை அதிக ரிக்கும் போது பணியில் இருப்பவர்க ளின் ஊதியத்திற்கு, வேலைக்கு ஆபத்து வருகிறது என்று அர்த்தம். வேலையின்மையை எதிர்த்து பணி யில் இருப்பவர்களும் போராட வேண்டும் என்று சிஐடியு அழைக்கி றது. ஆலை முதலாளிகள் வெளியில் வேலை இல்லாமல், ஊதியம் இல்லா மல் பல பேர் உள்ள நிலையில் பணியில் இருக்கும் நீங்கள் ஏன் போராடு கிறீர்கள் என்ற எண்ணத்தை பொது வான கருத்தாக உருவாக்குகிறார்கள். இந்தியாவில் 35 வயதுக்கு கீழே 65 விழுக்காட்டினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை இளைஞர்களுக்கு வேலை இல்லை. சிலர் 8 ஆயிரம், 10 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலைமை. இந்த நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் வேலைக்கு 2.5 லட்சம் பொறியாளர்கள் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ந்தெடுக்க ப்பட்டவர்கள் பலகட்ட பயிற்சியை முடித்து வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கை குறித்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்றால், நிர்வாக தரப்பில் பொறியி யல் படித்தவர்களுக்கு வெளியில் 12 ஆயிரம்தான் ஊதியம். இப்போது நாங்கள் அவர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்குகிறோம் என்கி றார்கள்.படித்த படிப்புக்கேற்ற கவுரமான வேலையோ, ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எந்த ஊதியமாக இருந்தாலும் பணி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.                                                                                                                                                                                                                    6லட்சம் சிறுதொழில் கூடங்கள் மூடல்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில், 1 ஆட்டோ, 1 கார் வைத்து ஓட்டுபவர்கள் எல்லாம் இனிமேல் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுடன் இணைத்துதான் ஓட்ட வேண்டும் எனக் கூறுகிறது. இந்தி யாவில் வாகன பழுது பார்ப்போர் மட்டும் 7 கோடி பேர் உள்ளனர். ஆனால் இனிமேல் வாகனம் உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் மட்டும்தான் பழுதுபார்க்க வேண்டும் எனக் கூறுகிறது. இதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. 6 லட்சம் சிறுந் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 90 லட்சம் பேர் வேலையி ழந்துள்ளனர். சிறு குறுந் தொழில்களை, பாரம்பரியமான தொழில்களை பாதுகாக்காமல் வேலைமையின்மைக்கு தீர்வு காண முடியாது
முதலாளிகளுக்கு  வரம்பு இல்லையா?
தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் அதிகபட்சமாக 20  விழுக்காடு போனஸ் என வரம்பு நிர்ண யம் செய்யப்படுகிறது. ஆனால் முதலாளிகளுக்கு எந்த வரம்பும் கிடையாது, எவ்வளவு வேண்டுமானா லும் லாபம் ஈட்டிக் கொள்ளலாம். 14.5 விழுக்காடு மின் நுகர்வு குறைந்திருக்கி றது. ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதும், பல நிறுவனங்கள் பணி இல்லாமல் வேலை நாட்களை குறைத்ததும்தான் மின் நுகர்வு குறைந்ததற்கான காரணம். மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தினால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
இளைஞர்களை திரட்டுக!
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். வேளான், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கினால்தான் தொழில் வளர்ச்சி பெரும். தொழில் வளர்ச்சி பெற்றால்தான் வேலைவாய்ப்பு பெருகும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மக்களிடத்திலே அம்பலப்படுத்த வேண்டும். வேலைமையின்மைக்கு அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை அணி திரட்டி போராட வேண்டும். போராட்டம் வலுவடைந்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

;