districts

img

தொழிலாளர் வர்க்க உரிமைகளை பாதுகாப்பதில் சமரசம் இல்லை அ.சவுந்தரராசன் பேச்சு

கோவை, ஜூன் 23– பாசிச பாஜகவை எதிர்ப்பதில் உங்களோடு தோள்கொடுப்போம். ஆனால் தொழிலாளர் நலன் காக் கும் போராட்டத்தில் ஒருபோதும் சம ரசத்திற்கு இடமின்றி போராடு வோம் என திமுக தலைமைக்கு அ. சவுந்தரராசன் எச்சரிக்கை விடுத் தார்.  கோவையில் செவ்வாயன்று  நடைபெற்ற போக்குவரத்து தொழி லாளர் பேரணி பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசுகையில், மாற்று மதத்தினரிடையே பகைமை யை உருவாக்குவது, ஒரே நாடு,  ஒரே மொழி உள்ளிட்ட அஜண்டாக்  களை இலங்கையில் ஆட்சியாளர் கள் முன்வைத்தனர். இன்று பெரும் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெரும் போராட் டத்தை நடத்தி வருகின்றனர். சிறு பான்மைக்கு எதிரான எந்த நட வடிக்கையும் அமைதியை தராது  என்பதற்கு இலங்கையே தற்போ தைய உதாரணம். இலங்கை போன்ற  அத்தனை அம்சங்களும் நமது நாட்டி லும் நடைபெறுகிறது. கார்ப்பரேட்டு களோடு கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு வங்கி, ரயில்வே, எல்ஐசி என அனைத்தையும் மோடி அரசு  தனியார்மயமாக்குகிறது. இப்போது  ராணுவத்தையும் தனியார்மயப்  படுத்துகிறது. இதனை எதிர்த்து போரா  டுகிற இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அரசின் செல வில் தனிப்பிரிவை பாஜக உருவாக்க திட்டமிடுகிறது. ஏற்கனவே இந்தியா வில் ராணுவத்தில் சேர்வதற்கு 6 லட்சம் இளைஞர்கள் தகுதித்தேர்வு, உடல்தேர்வு அனைத்தையும் முடித்துவிட்டு எழுத்து தேர்வுக்காக காத்திருக்கிற நிலையில் ராணுவம் காண்டிராக்ட் என்றால் இளைஞர் கள் என்ன செய்வார்கள்.

ஆகவே  போராடுகிறார்கள். வடமாநிலங்க ளில் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத்  துறையை பாதுகாக்க வேண்டும் என்கிற போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் முன்னின்று நடத்தும்.  தமிழகத்தில் அரசு போக்கு வரத்து கழகங்களை தனியார்மயப்  படுத்தும் நடவடிக்கைகளை மறை முகமாக தமிழக அரசு மேற்கொள்கி றது. இதனை ஒருபோதும் நாங்கள்  அனுமதிக்க மாட்டோம். அரசின் துறையாக போக்குவரத்து இருப்ப தால்தான் நீங்கள் மகளிருக்கு இல வச பேருந்து பயணம், மாணவர் களுக்கு இலவச பயணம் என்று அறி விக்க முடிகிறது. மின்வாரியம் அர சின் கையிலே இருப்பதால்தான் விவ சாயிகளுக்கு இலவச மின்சாரம் தர முடிகிறது. கூட்டுறவுத் துறை அர சின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் நகை தள்ளுபடி என உங்களால் அறிவிக்க முடிகிறது. இவையெல் லாம் அரசு வசம் இல்லையென்றால் அறிவிக்க முடியுமா என்பதே எங் கள் கேள்வி.  திமுக தேர்தல் வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று பெருமையோடு சொல்வது எங்களுக்கும் மகிழ்ச்சி. நாங்கள் ஆதரித்த ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்பதால், அதேநேரத்தில் உங்களின் 80சதவீத வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதில் ஒரு தொழிலாளி கூட பயன்பெற வில்லையே என்பதுதான் வருத்த மாக உள்ளது. அரசுபோக்குவரத்து ஊழியர் துவங்கி, அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், செவிலியர்கள், கொத்துக்கொத்தான முறைசாரா தொழிலாளர்கள் அனைத்து தரப்பு தொழிலாளிகளும் போராடிக்கொண் டிருக்கிறார்களே. இது உங்களுக்கு தெரியவில்லையா? கடந்த ஆட்சியின் அலங்கோலத்  தில் அரசு கடனில் இருக்கிறது என்ப தால் அவகாசம் கேட்டீர்கள். ஓரா ண்டு அவகாசம் கொடுத்துவிட் டோம். இன்னும் எத்தனை நாள் அவ காசம் தரமுடியும். அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை.

எங்க ளுக்கு சேரவேண்டியதை கேட்கி றோம். எங்களிடம் பறித்துக்கொண் டதை திரும்பக்கொடுங்கள் என்கி றோம். 30 ஆண்டுகாலம் ஓடாய் உழைத்  திட்ட தொழிலாளியை வெறுங்கை யோடு வீட்டுக்கு அனுப்பாதீர்கள். மகளின், மகனின் திருமணம் உள் ளிட்ட பல்வேறு கனவுகளோடு தனது  பணிக்காலத்தை பூர்த்தி செய்து விட்டு ஓய்வுபெரும் நாளில் பணம்  கிடைக்கும் இந்த கனவுகளையெல் லாம் நிறைவேற்றலாம் என்கிற அவர்  களின் கனவை நொறுக்குவது நியா யமா என்று கேட்கிறோம். அவர்  களின் பணப்பயன்களை உடனுக்கு டன் தாருங்கள் என்கிறோம்.மத வெறி பிடித்த பாசிச பாஜகவை எதிர்ப்பதற்கு உங்களோடு தோள் கொடுப்போம். உங்களை விட ஓரடி  முன்னால் நின்று எங்கள் உயிரைக்  கூட நாங்கள் தருவோம். அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதனை எதிர்த்து போராடுவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். அரசுபோக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசிமுடியுங்கள். தாமதமானால் வேலை நிறுத்தம் செய்வதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை. கோரிக்கைகள் குறித்து பேசி முடி வெடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் புதுகை பூபாளம் கலைக்குழுவின ரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திண் டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.