tamilnadu

img

3 நாட்களாக பாலாற்றின் நடுவில் சிக்கியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்  

3 நாட்களாக பாலாற்றின் நடுவில் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.  

பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் சுமார் 25ஆயிரத்து 300 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்று பாலத்தின் கீழ் சிக்கியிருந்த நபரை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து விசாரணை செய்ததில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பதும் மதுபோதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் தெரியவந்தது. மேலும் பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;