பழுப்பு நிற பாண்டாவின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, சீனாவில் உள்ள ஒரே பழுப்பு நிற பாண்டாவை சர்வதேச பாண்டா அமைப்பு தத்தெடுத்துள்ளது.
சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வளர்க்கப்படும் ஒரே ஒரு பழுப்பு நிற பாண்டாவுக்கு, ’குய்ஸாய்’ என பெயரிடப்பட்டது. இந்த பழுப்பு நிற ஆண் பாண்டாவை கொண்டு, இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த சர்வதேச பாண்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு தேவையான உணவு பொருட்களை அளிப்பதோடு, பழுப்பு நிற பாண்டாக்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உதவிகளையும் வழங்கும் வகையில், டென்வரை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பாண்டா அமைப்பு ஒன்று குய்ஸாயை தத்தெடுத்துள்ளது.