tamilnadu

img

இந்தியா - பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்: பேச்சுவார்த்தையே தீர்வு

பெய்ஜிங், ஆக.9- இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தியுள்ளது.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ள தற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்போவதாகத் தெரி வித்தது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தங்களுக்கு உதவக் கோரி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பெய்ஜிங் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் இருநாடுகளும் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும், அமைதியைப் பேணுவதில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாடு மட்டும் ஒருதலைப்பட்சமாக சூழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

;