பெய்ஜிங், மே 24- கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் கேன்சினோ பயோ லாஜிக்ஸ் ஆராய்ச்சியாளர்களால் உரு வாக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை (கோவிட் -19) மனிதர்களுக்குச் செலுத்தியதில் அது பாதுகாப்பாகவும் பயனுள்ள தாகவும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரி சோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் சீனா அறி வித்துள்ளது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்விதழான “தி லான்செட்” இதழில் செய்தி வெளி யிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 27-ஆம் தேதி தகுதியான 195 பேரை கண்காணித் துள்ளது. அவர்களில், 108 பேரை சோத னைக்கு உட்படுத்தியுள்ளது இதில் 51 சதவீதம் பேர் ஆண்கள். 49 சதவீதம் பேர் பெண்கள். சராசரி வயது 36.3 என கணக்கிடப்பட்டது. அவர்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அவர்களது உடலில் எந்தவித தீவிர மான மாற்றங்களும் கண்டறி யப்படவில்லை. தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளதே இதன் பொருளாகும். ஆனால் மருந்து செலுத்தப்பட்டவர்கள் அதிகக் காய்ச்சல், சோர்வு மற்றும் தலை வலி, மூட்டுவலி போன்ற பக்க விளைவு களால் அவதிப்பட்டனர். இந்தத் தடுப்பூசியால் நன்மைகளும் தீமை களும் உள்ளன. ஆனால் இது வெற்றி கரமாக இருக்கும் என நம்பப்படு கிறது. இது சார்ஸ் வைரசுக்கு எதி ராகவும் செயல்படக்கூடியது.
இந்த தடுப்பு மருந்துக்கு Ad5-nCoV எனப் பெய ரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோத னையின் வெற்றி, அடுத்த கட்ட சோத னைகளை தொடர வழி செய்துள்ளது. இவ்வாறு ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. “தாங்கள் கண்டறிந்த முடிவுகள் ஒரு முக்கியமான மைல்கல். இந்தத் தடுப்பூசி 14 நாட்களில் வைரஸ் சார்ந்த ஆன்டிபாடிகள் மற்றும் ‘டி’ (T)செல் களை உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது என்று பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னா லஜி நிறுவனத்தின் பேராசிரியர் வீ சென் ஒரு அறிக்கையில் தெரிவித்துள் ளார். மேலும் கூடுதல் விவரங்க ளை https://www.thelancet.com இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம். வயது, கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு மருந்து கலவையின் விகிதாச்சாரம், எதிர்வினைகள் ஆகியவையும் பதிவிடப்பட்டுள்ளது. -தி லான்செட் இணையதளத்திலிருந்து