tamilnadu

img

கரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 7,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றை தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றது.

இந்த சூழலில், சீனாவின் உகான் நகரம் மற்றும் அதற்கு அருகில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கும் நோய் தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் உள்ளனர். உகானில் வசித்து வந்த ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள், நேற்று சொந்த நாடுக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே போல், வெளிநாட்டினரை அங்கிருந்து அழைத்து வர அனைத்து நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், உலக சுகாதார நிறுவனம் இது சம்பந்தமாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினரை யாரும் அழைத்து செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம். அது  வெளிநாடுகளில் நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும். சீன அரசே அதை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளது.
 

;