சூடான் நாட்டில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் தலைநகர் கார்டும் பகுதியில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்துள்ள 130 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்தும், தொழிற்சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், 34 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், 16 இந்தியர்கள் காணவில்லை என்றும், 7 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்களின் பெயர் பட்டியலை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.