tamilnadu

img

சீனா: தொழிற்சாலை வெடி விபத்தில் 7 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் பாலிதீன் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.