tamilnadu

img

சிவகங்கை திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அநியாய வசூல்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பணம் கட்டிச் செல்வோர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி வழியாக ஒரு முறை சென்று திரும்ப  ரூ.70 வசூல் செய்து கொண்டிருந்தனர். தற்போது இந்தக் கட்டணத்தை ரூ140ஆக உயர்த்திவிட்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் 12நுழைவுவாயில்கள் உள்ளன. இதில் ஒரே ஒருநுழைவுவாயிலில் மட்டுமேபணம் வசூலிக்கின்றனர். மற்ற 11 நுழைவாயில்களிலும் ஆட்கள் இல்லை. 12 வாயில்களில் 10 வாயில்கள் ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 12 வாயில்களில் குறைந்தது ஆறு வாயில்களில் அன்றாடம் கட்டணம் செலுத்திச் செல்லும் முறையை அமல்படுத்த வேண்டும்.

தற்போது ஒரு நுழைவுவாயிலில் மட்டும் பணம் வசூலிக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பாஸ்டேக் வாங்காதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. சாலைவரி வசூல் செய்யும்போது சுங்கச்சாவடி வரி வசூல் செய்வதுமக்கள் விரோத;r செயலாகும். அனைவரும்  ஒன்றிணைந்து போராடினார் தான் இதற்குத் தீர்வு காணமுடியும். திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடியை கடந்து செல்லும் சிவகங்கை மாவட்ட பதிவு எண்ணுக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சிவகங்கை மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும்.

;