tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்-அதிகாரிகள் ஏற்க மறுப்பு

நாமக்கல், ஜன.29- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினமான ஜனவரி.26 ஆம்  தேதியன்று தமிழகம் முழுவ தும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதி யாக ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.கவுண்டம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை சேர்ந்த காளியப்பன் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்று, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குடியு ரிமை திருத்தச் சட்டத்தை மத் திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களில் கையொப்பமிட்டு கிராமசபை அலுவலரிடம் வழங்கி னார்கள். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரி, அரசுக்கு எதி ரான தீர்மானங்களை இந்த கூட் டத்தில் நிறைவேற்ற முடியாது என்று  கூறி நிராகரித்தனர்.  இதையடுத்து ஊராட்சி தலை வர் மற்றும் பொதுமக்கள் மனுக் களை ஏற்க தொடர்ந்து வலியு றுத்திய பிறகு, நீங்கள் கொடுத் ்துள்ள மனுக்களை தீர்மானமாக நிறைவேற்ற முடியாது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து கோரிக்கை மனுவாக கொடுங்கள். நாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம் என்று அதிகாரி விளக்கம் அளித்துள் ளார்.  ஆனால் அதிகாரியின் விளக் கத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் மனுவை தீர்மானமாக நிறை வேற்றக்கோரி  தொடர்ந்து வலியு றுத்தினர். இருப்பினும், மனு வினை பெற அதிகாரி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, அதிகாரி தவறான தகவலை கொடுத்து தங்களது மக்கள் நலன் சார்ந்த மனுவை நிராகரித்து விட்டதாக வும், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்க இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

;