tamilnadu

img

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 35 நாட்கள் இருளில் மூழ்கியிருக்கும் கிராமம்

“முல்லைக் கொடிக்கு தேர் தந்தான் பாரி” என்று கடையேழு வள்ளல்களின் கதை கேட்டுவளர்ந்திருக்கிறோம் நாம். நம்மிடமும்மனிதம் இன்னும் மரணிக்காமல் இருக்க இந்த கதைகளும் ஒரு காரணமாகத் தான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளபொத்தகுடி கிராமமக்களும் பாரிகளை போல செயல்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைந்துள்ளன.

அனைத்தையும் ஒரே நேரத்தில் எரிய வைப்பதற்கான மெயின் ஸ்விட்ச்போர்டு கருப்புராஜா என்ற கல்லூரிமாணவர் வீட்டில் உள்ளது. 40 நாட்களுக்கு முன்பு தெருவிளக்குகளை போடுவதற்காக ஸ்விட்ச் போர்டு அருகே அவர் சென்றுள்ளார். அப் போது அங்கே தவிட்டுக்குருவி என்றழைக்கப்படும் சிட்டுக்குருவி (Passerdomesticus) ஒன்று அட்டைப் பெட்டியில் சிறு சிறு வைக்கோல் புற்களை சேர்க்க தொடங்கியிருந்துள்ளது. உள்ளேஎட்டி பார்க்கும் போது மூன்று சிறுமுட்டைகள் இருந்தது. தற்போது ஸ்விட்ச் ஆன் செய்தால் பறவை பயந்துவிடுமோ என்று எண்ணி தெருவிளக்குகளை ஆன் செய்யாமல் இருந்துவிட்டார் கருப்புராஜா.

மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று உணர்ந்த அவர் தன்னுடையகிராம இளைஞர்கள் அனைவரையும்வாட்ஸ்ஆப் க்ரூப் ஒன்றில் இணைத்துதன்னுடைய கருத்தையும் எடுக்க இருக்கும் முடிவுகள் குறித்தும் கேட்டுஅறிந்தார். அந்தப் பகுதியில் தற் போது தெருவிளக்குகள் எரிந்து ஒருமாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைக்கவில்லை. தற்போது மூன்றுமுட்டைகளிலும் இருந்து சிட்டுக் குருவி குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன. அவை பறக்க கற்றுக் கொள்ளும் வரை இந்த நிலை தொடர்ந்தாலும் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாகஏற்றுக் கொள்வோம் என்கின்றனர்.

பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள25 இனங்களில் இதுவும் ஒன்றாகும்.தவிட்டுக்குருவிகள் என்றழைக்கப படும் சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் உயிர் வாழும். மணிக்கு 46 கி.மீ.,வேகத்தில் பறக்கும். செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறமுள்ளது. ஆனால்இதை மறுக்கின்றனர் பறவையியல்ஆராய்ச்சியாளர்கள். விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமும், அவை இரை தேடுமிடமும் சுருங்கிவிட்டது. வயல்களில் இரசாயனங்கள் தெளிக்கப்படுவதால் சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சியினங் கள் அழிக்கப்படுகின்றன. சிட்டுக்குருவி கள் வனப்பகுதியில் வாழ்வதை விடமனிதர்களுடன் வாழ்வதையே விரும்பும்.

;