tamilnadu

திருநெல்வேலி முக்கிய செய்திகள்

கடையநல்லூர் அருகே ஆழ்துளை கிணறு மூடல்
திருநெல்வேலி, அக்.28-நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரி கூடபுரத்தில் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மா வட்ட தலைமைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவி த்தார். உடனே தென்காசி மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் உத்த ரவின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திரிகூடபுரம் கிளை சகோ தரர்கள் அந்த இடத்திற்கு சென்று, கிணற்றை முழுவதுமாக மூடினர். இதைபோல் நமது பகுதியில் ஆபத்தான நிலையில்  ஆழ்துளை கிணறு எங்கு இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என மாவட்டப் பொருளாளர் செய்யது  மசூது தெரிவித்தார்.

வெள்ளைக் கத்தரி விலை உயர்வு
திருநெல்வேலி, அக்.28- நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதி வெள்ளைக் கத்தரிக்காய்க்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உண்டு. இங்கு நாள்தோறும் விவசாயிகள் கொண்டு  வரும் கத்தரிக்காய் மூட்டைகளை வியாபாரிகள் ஏல விற்பனை  மூலம் கமிஷன் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து வியா பாரிகளுக்கு விற்பனை செய்து கொடுப்பர் மொத்த வியாபாரிகள்.  இந்நிலையில் கடந்த சில தினங்களாக மூட்டை ஒன்றிற்கு ரூ.2000 முதல் 3000 வரை விலை போன கத்தரிக்காய் மூட்டை கள் ரூ.4200 வரை விற்பனையானது. இதனால் சில்லறை விற்ப னையில் கிலோ ஒன்றிற்கு ரூ.60முதல்ரூ.70வரை விற்கப்பட்டது.