tamilnadu

img

பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி வெங்கடேஸ்வரா பள்ளி  மாணவி முதலிடம்

 புதுக்கோட்டை, செப்.7-  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி பாரதிதாசன் பாடல் ஒப்பு வித்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அண்ணா பிறந்த நளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவி களுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இடம் பெற்று மாநில அளவிற்கு மணாவி ர.மகாநிவேதிதா தேர்வு பெற்றார். அதன் தொடர்ச்சியாக மாநில அளவில் கலந்துகொண்டு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ர.மகா நிவேதிதா முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராகவன் பாராட்டினார். பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி மற்றும் துணை முதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.