சிஐடியு மாநில மாநாடு வலியுறுத்தல்
காஞ்சிபுரம், செப். 22- குடிநீரை தனியாரிடம் தரக்கூடாது, புதிய கல்விக் கொள்கை வரைவு நகலை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு 14வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களின் விவரம் வருமாறு:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 1971ஆம் ஆண்டு 12,000 பணியிடங்களோடு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வழங்கும் சீரிய நோக்கோடு துவங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை 5,000 ஆக குறைத்தது. தற்போது மீண்டும் காலியாக உள்ள சுமார் 3,000 பணியிடங்களை ஒழிப்பதாக அரசு அறிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்கு பிறகு ஏராள மான குடிநீர் திட்டங்கள் துவங்கிய பிறகும் ஊழியர்கள் எண்ணிக்கை தேவையான அளவு அதிகப்படுத்தா மல் ஏற்கனவே உள்ள பணியிட ங்களை குறைக்கும் நடவடிக்கை யானது வாரியத்தின் உன்னத நோக்கத்தை சீர் குலைக்கும் செயலாக உள்ளது. மேலும் குடிநீரை பரிசோதிக்க சிறுவாணி, பில்லூர் திட்ட தலைமை யிடங்களில் உருவாக்கப்பட்ட நீர் பரிசோதனை கூடங்களில் பரிசோத கர்கள் இல்லாததால் தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்படாமல் பொது மக்களுக்கு வழங்கும் நிலையும் உள்ளது, கோவை சூயஸ் கம்பெனி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அரசு முயல்வது வருந்தத்தக்கது. இது குடிநீரையும் விலை கொடுத்து பெற வேண்டியதாக மாறுகிறது. எனவே குடிநீர் வினியோகத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும், குடிநீர் வடிகால் வாரியத்தில் நீர் பரிசோதனை கூடங்க ளில் பரிசோதகர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து, சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் அனைவருக்கும் வழங்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு 14ஆவது மாநில மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக
இன்றைக்கு மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்றவுட னேயே கையெழுத்திட்ட முதல் ஆவணம் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 பொதுக்கல்வியை அரசு கை கழுவுவதற்கான ஏற்பாடுதான் இது. இதனை தயாரித்தவர்கள் யாரும் கல்வியாளர்கள் அல்ல, இந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள விஷயங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி முறை மைக்கும், சமூகநீதிக்கும், பெண்க ளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும், இந்தியாவின் பொதுக்கல்வி முறைமைக்கும் எதிரானது. மத்திய அரசு இப்போது அமல்படுத்தவுள்ள கல்விக் கொள்கையில் மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் வடிகட்டி குழந்தைகளை கல்வியை விட்டே துரத்தும் ஏற்பாடே உள்ளது. கல்வி கற்பது என்பது கட்டாயமான ஒன்று என்று 2003இல் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு, இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை எதிரானது. அருகாமைப் பள்ளி என்பது இல்லாத தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பெண் குழந்தைகள்தான். குழந்தைகள் பள்ளி இடைநிற்றலால் அவர்கள் தவிர்க்க முடியாமல் தொழிற்கல்வி என்ற பெயரில் குலத்தொழிலுக்கும் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாக்க இக்கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. 30 கோடி மாணவர்களின் எதிர்கால த்தை பின்னுக்கு தள்ளுகிற, அறிவியல்பூர்வமற்ற தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம்
குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து அனைவரையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பெண்கள் பணி புரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சேலம் உருக்காலை, சேலம் உருட்டாலையை தனியார்மய மாக்கும் முடிவை கைவிட வேண்டும், ரயில்வே துறையை சீரழிக்கும் நட வடிக்கைகளை கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்த சரத்துக்களை முறை யாக, முழுமையாக போக்குவரத்து கழகங்கள் அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து ரிசர்வ் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழக மின் நுகர்வோர்களுக்கு தரமான தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
மின்வாரியம் பொதுத்துறை யாகவே நீடிக்க வேண்டும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறையில் துப்பரவு பணியை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின், பீடி தொழிலாளர்களின் ஊதிய மாற்று பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும், விசைத்தறி தொழிலையும், தொழிலாளர்களை யும், தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சிஐடியு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்ப ட்டன.
தீர்மானங்களை முன்மொழிந்த சிஐடியு தலைவர்கள் கோபிகுமார், சந்திரன், முத்துக்குமார்.