tamilnadu

img

செம்மயமானது பட்டு நகரம்

சிஐடியு மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் இன்று துவங்குகிறது

காஞ்சிபுரம், செப்.18- தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திர மான சிஐடியுவின் 14 வது மாநில மாநாடு பட்டு நகரமாம் காஞ்சிபுரத்தில் வியாழனன்று (செப்.19) எழுச்சியுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்.22 வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை யொட்டி காஞ்சி நகரம் முழுவதும் செங்கொடி களால் செம்மயமாக காட்சியளிக்கிறது.  காஞ்சிபுரத்தில் தோழர் கே.எஸ்.பார்த்த சாரதி நகரில் தோழர்கள் வி.வி. கிருஷ்ண மூர்த்தி, எல்.தியாகராசன் நினைவரங்கத்தில் (அருணா மஹால்) மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறவுள் ளது. மாநாட்டுக் கொடி மற்றும் தோழர் வி.பி. சிந்தன் நினைவுச் சுடர் பெறும் நிகழ்வைத் தொடர்ந்து மாநாட்டுக் கொடியை மாநி லக்குழு உறுப்பினர் கே.பழனிவேலு ஏற்றி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலை மையில் நடைபெறும் பொதுமாநாட்டில் வர வேற்புக்குழு தலைவர் எஸ்.கண்ணன் வர வேற்றுப்பேசுகிறார். பொது மாநாட்டைத் துவக்கி வைத்து சிஐடியு அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரை யாற்றுகின்றார்.

தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனை களில் சிஐடியு-வுடன் இணைந்து கூட்டாக போராடும் தோழமை சங்கத்தை சேர்ந்த தலை வர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசுகிறார் கள்.  பிற்பகல், பிரதிநிதிகள் மாநாட்டை அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா துவக்கி வைக்கிறார்.  மாநாட்டின் நிறைவுநாளான செப்.22 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் மாநாட்டை முடித்துவைத்து உரையாற்ற உள்ளார். வரவேற்புக்குழு செயலாளர் இ.முத்துக்குமார் நன்றி கூறுகிறார். தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு எதி ராகவும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலன் காத்திடும் வகையிலும் அரசு பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாத்திடவும் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற் றப்படவுள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

மாநாட்டையொட்டி தொழிலாளர்களின் நலன்களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாநாடு நடைபெறும் நான்கு நாட்களும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் செப்டம்பர் 19,20,21 ஆகிய நாட்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். 19ஆம் தேதி புதுவை சப்தர்ஹாஷ்மி கலைக்குழுவின் வல்லரசு 2 பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், 20ஆம் தேதி தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நா.முத்து நிலவன், பேராசிரியர் சுந்தரவள்ளி பங்கேற்கும் வழக்காடு மன்றம், கவியரங்கம், 21ஆம்தேதி திருப்போரூர் புதுவிசை கலைக்குழுவின் பாடல்கள், கிராமிய நடனங்கள் மற்றும் பேரா சிரியர் காளீஸ்வரன் உரை வீச்சு ஆகியவை இடம் பெறுகின்றன.

மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம்

மாநாட்டின் நிறைவு நாளான செப். 22 அன்று மாலை சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மாநாட்டுப் பேரணியும் காந்திரோடு தேரடியில் அகில இந்திய - மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

அ.சவுந்தரராசன் பேட்டி 

மாநாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் வியா ழனன்று (செப்.19) செய்தியாளர்களிடம் அ. சவுந்தரராசன் பேசினார். அவர் கூறியதாவது:  கடந்த சில ஆண்டுகளாகவே தொழிலா ளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின் றனர். தற்போது பாதிப்பின் உச்சத்தில் இருக் கின்றோம். பொருளாதார நெருக்கடி, தொழில் நெருக்கடி என்பது பணமதிப்பிழப்புக்குப் பிறகு ஒவ்வொரு துறையாக பாதிக்கப்பட்டு பிஸ்கெட் தொழில் முதல் மோட்டார் வாகனம் வரை தொழில்நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்பு ஒப்புக்கொள்ளாத மத்திய அரசு இப்போது ஒப்புக் கொள்ளத் துவங்கி யுள்ளது. ஏதோ பிரச்சனை உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் கூட ஒப்புக் கொண்டுள்ளார். இதுவே உருப்படியான நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்கள் என்பதற்கு அடையா ளம் நோயை புரிந்து கொள்ளாமல் மருந்தைக் கொடுக்க முடியாது. நோயே தெரியாது என்ப வர்கள் தான் இப்போது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தின் அரிச்சுவடி தெரியாதவர்தான் நமது நிதி அமைச்சர் என்பது வேதனையளிக்கிறது. இந்த நெருக்கடியால் அனைத்துப் பொருட்களும் தேங்கியுள்ளன. விற்பனை என்பது பெரிய கடைமுதல் நடைபாதை கடை வரை இல்லை. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். செல்வத்தை உரு வாக்குவோர் முதலாளிகள் என்று ஆட்சி யாளர்கள் சொல்கின்றனர். செல்வத்தை உரு வாக்குபவர்கள் விவசாயிகள், தொழிலா ளர்கள் தான். முதலாளிகள் என்போர் லாபத்தை உறிஞ்சுபவர்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில் மந்தத் தால் பத்து லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை போய் விட்டது மற்றத் துறைகளில் ஐம்பது லட்சத்திற்கும் மேல் வேலை போய் விட்டது. சிறு தொழில் செய்து வந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களாக மாறிவிட்டனர். இம்மாநாட்டில் பொருளா தார பெருமந்தத்தில் இருந்து பொருளாதா ரத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். தொழிலாளர் நலன், நாட்டின் நலன் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.  உற்பத்தி நிறுத்தம் காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள மந்தத்தைப் பயன்படுத்தி வேலையில் இருந்து நீக்குவது சரியல்ல; கடந்த காலத்தில் ஈட்டிய லாபத்திலிருந்து அந்த சம்பளத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுடன் தொழிலா ளர்களுடன் இணைந்து பல போராட்டங் களை நடத்தவும் சிஐடியு மாநில மாநாடு திட்டமிடவுள்ளது.

பல்வேறு தொழிற்சங்கத்தின் தலை வர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தொழிலைப் பாதுகாப்போம், விவ சாயத்தைக் பாதுகாப்போம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம். தேசத்தைக் பாதுகாப்போம். மக்கள் ஒன்றாய் வாழ்வதை உறுதி செய்வோம் என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெற உள்ளது இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார். பேட்டியின் போது சிஐடியு காஞ்சி புரம் மாவட்டத்தலைவர் எஸ்.கண்ணன், செய லாளர் இ.முத்துக்குமார் உடனிருந்தனர்.
 

;