புவனேஸ்வரம், ஜூன் 5-சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லிய மாக தாக்கி அழிக்கும். மணிக்கு 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தரை, வான் மற்றும் கடலில் இருந்து இந்த ஏவுகணையை எதிரிகளை நோக்கி ஏவ முடியும்.பிரமோஸ் ஆனது அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது போர் கப்பலை எதிர்க்கும் திறன் சோதிக்கப் பட்டது.ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.