tamilnadu

img

இந்தியா கொண்டுவந்துள்ள ‘சிஏஏ’ சட்டம் தேவையற்றது!

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகள் கருத்து! 

புதுதில்லி, ஜன.21- அபுதாபியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடம், இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து, ‘கல்ப்’ செய்தி நிறுவனம் பேட்டி கண்டுள்ளது. அப்போது, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதி வேடு ஆகியவை இந்தியாவின் உள் விவகாரம்; எனினும், இந்திய அரசு ஏன் அதைக் கொண்டு வந்தது என்று எங்க ளுக்குப் புரியவில்லை. அது தேவை யற்ற ஒன்று என்பது எங்களின் கருத்து” என்று ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும், “துன்புறுத்தல் காரணமாக சிறுபான்மை மக்கள் யாரும் வங்க தேசத்தை விட்டு வெளியேறவில்லை” என்று குறிப்பிட்டுள்ள ஹசீனா, “மாறாக, இந்தியாவுக்குள் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள்” என்றும் மறைமுக மாக தனது விமர்சனத்தையும் வைத் துள்ளார். அதேபோல, ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹமீத் கர்சாய் ‘தி இந்து’ ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் நாட்டில் மத ரீதி யாகத் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறு பான்மையினர் யாருமில்லை. நீண்ட காலமாக நடந்துவரும் போரினால், மூன்று முக்கிய மதங்களான இஸ்லா மியர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் என எங்களின் முழுநாடுமே துன்புறுத்தப் படுகிறது” என்று கூறியுள்ளார். “இந்தியாவில் எதற்காக குடி யுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்குக் குறிப்பிட்ட கார ணங்கள் ஏதாவது இருக்கலாம். அது பற்றி கருத்து சொல்ல முடியாது” என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

;