தருமபுரி செங்கொடிபுரம் தூய்மைப் பணியாளர்களுக்கு
வீட்டு மனை பட்டா கோரி அமைச்சரிடம் சிபிஎம் மனு
சென்னை, அக்.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில், டில்லி பாபு, ராமச்சந்திரன், செங்கொடிபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலை வர் முனியப்பன் ஆகியோர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரை சந்தித்து, தருமபுரி யில் நூறாண்டு காலமாக குடியிருந்து வரும் செங்கொடிபுரம் தூய்மைப் பணி யாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு கோரி நேரில் மனு அளித்த னர். செங்கொடிபுரம் பகுதி ஆங்கிலே யர் காலத்திலிருந்தே குடியிருப்புப் பகுதி யாக இருந்து வருகிறது. இப்பகுதி ‘ஸ்கேவஞ்சர்ஸ் சைட்’ என்று இன்றைக் கும் அரசின் பதிவேடுகளில் பதியப்பட் டுள்ளது. இப்பகுதிக்கு பட்டா வழங்கிடக் கோரி பல ஆண்டுகளாக நீண்ட நெடிய போராட்டத்தை சிபிஎம் மற்றும் செங் கொடிபுரம் குடியிருப்போர் நல சங்க மும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிபிஎம் மாவட்டச் செயலாளராகவும் இருந்த டில்லி பாபு செங்கொடிபுரம் பகு திக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். அப்போது, நகராட்சி நிர்வாகமும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையும் இணைந்து ஆய்வு செய்து பின்னர் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது. அதன்பின். தூய்மைத் தொழிலாளர் கள் குடியிருப்போர் குடும்ப பட்டியல் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்றோர் பட்டியலும் இணைக் கப்பட்டது. இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் பட்டியலின மற்றும் பணி யாண்டி சமூகத்தைச் சேர்ந்த குடும் பத்தினர். நகரத்தை சுத்தம் செய்கின்ற தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிப வர்கள். இவர்களது வீடுகள் 56 சென்ட் நிலத்தில் அமைந்துள்ள 54 குடும்பங் களாகும். சமீபத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி, மாநகராட்சி போன்ற பகுதிக ளில் ஒரு சென்ட் நிலம் வீட்டுமனை யாக இலவசமாகவும், அதற்கு மேல் இருப்பின் வருவாய் அடிப்படையில் பணம் செலுத்துவது என்ற விதிமுறை களின் அடிப்படையில் அறிவித்த அர சாணையின்படி பட்டா வழங்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், “தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியரி டம் இருந்து பெற்று, அதன் அடிப்படை யில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சிக ளில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியரி டம் விவரத்தை கேட்டு பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். கடந்த காலத்தில் பேருந்து நிலை யத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட இந்த இடம் தேவை என்று நகராட்சி நிர் வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தற் போது தருமபுரி மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பென்னாகரம் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கள் விரைவாக நடந்து வருகின்றன. எனவே இந்த பகுதியில் நகராட்சி நிர்வா கம் வணிக வளாகமோ அல்லது மற்ற அமைப்புகளையோ கொண்டு வருவ தற்கான வாய்ப்புகளே இல்லை. 100 ஆண்டு காலம் குடியிருக்கும் ஏழை எளிய தூய்மை பணித் தொழிலாளர்க ளுக்கு பட்டா வழங்குவதற்கு அமைச்சர் கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்ச ரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. இதே செங்கொடிபுரத்திற்கு பட்டா வழங்க வேண்டிய மனு, வேளாண் மற் றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வத்திடமும் அக் டோபர் 14 அன்று டில்லி பாபு மற்றும் முனி யப்பன் ஆகியோரால் நேரில் சந்திக் கப்பட்டு மனு அளிக்கப்பட்டு விரிவாக பேசினர்.
