மண்டல அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டி
நாமக்கல், செப்.19– ஈரோடு மண்டல அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டியில், கே.எஸ்.ரங்கசாமி தொழிற்நுட்ப பயிலக மாண வர்கள் அசத்தல் சாதனை புரிந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ரங்க சாமி தொழில்நுட்பப் பயிலகத்தில் ஈரோடு மண்டல அள விலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கோ- கோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாண வர்கள் பிரிவில் ஏழு அணிகளும், மாணவிகள் பிரிவில் ஏழு அணிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக முதல்வர் பி.கோபி நாத், கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் இயக்குநர்-ஸ்போர்ட்ஸ் எஸ்.முத்து கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்த னர். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன், துணைத்தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பிரிவில் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக அணி நான்கு புள்ளிகள் வித்தியாசத்துடன், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியை வென்று முதல் இடம் பெற்றது. ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி முறையே மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்றன. இதேபோல் மாணவிகள் பிரி வில் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக அணி ஒரு புள்ளி மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில், ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியை வென்று முதல் இடம் பெற்றது. எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முறையே மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்றன. முதல் இடம் பெற்றதன் மூலம் கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக கோ-கோ மாணவர் அணி, மாணவியர் அணி இரண் டும் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற் றுள்ளனர். இதன் பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவ னங்களின் இயக்குநர் - நிர்வாகம் பேராசிரியர் வி.மோகன் வெற்றி பெற்ற அணியினருக்கு கேடயம், பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினரை பாராட்டினர்.
