போதை கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்க நாமக்கல் மாநாடு வலியுறுத்தல்
நாமக்கல், செப்.29- போதை கலாச்சாரத்தை தடுத் திட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாமக்கல் 10 ஆவது மாவட்ட மாநாடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே உள்ள வைரமுத்து நினைவகத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் லட்சுமணன் வெண்கொடி யேற்றி வைத்து மாநாட்டிற்கு தலைமை வகித்தார். அஞ்சலி தீர் மானத்தை ராஜ் தேவ் முன்மொழிந் தார். கௌசல்யா வரவேற்றார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் மு.மணிகண்டன் வேலை அறிக்கையை முன்மொழிந்து தொகுப்புரையாற்றினார். இம்மாநாட்டில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள இளை ஞர்களுக்கு, விளையாட்டு திறன், உடல் திறன் மேம்பட அனைத்து கிராமம், நகரங்களிலும் விளை யாட்டு மைதானம் அமைத்து கொடுத்திட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மற்றும் அங்கன் வாடி மையங்களில், பெண் மாணவி கள் பாலியல் துன்புறுத்தல் நடை பெறுவதை தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். பள்ளிபாளையம் பர மத்திவேலூர், மங்களாபுரம், கொல் லிமலை, எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசுக் கல்லூரி அமைத்து தர வேண்டும். சாதி ஆவணப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றிட வேண் டும். இயற்கை வளங்களை பாது காத்திட வேண்டும். போதை கலாச் சாரத்தை தடுத்திட கடும் நடவ டிக்கை எடுத்திட வேண்டும். தனி யார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண் டும். தமிழகத்தில் மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழக இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு முன் னுரிமை வழங்கிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் மாவட்டத் தலைவ ராக எம்.நவீன், செயலாளராக தே. சரவணன், பொருளாளராக ரா. ராஜ தேவ், மாவட்ட துணைத் தலைவர்க ளாக சௌஸ்திகா, எம். பிரியா, துணைச் செயலாளர்களாக மௌலீஸ்வரன், கோபால் உள் ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் சி.எம் பிர காஷ் நிறைவுறையாற்றினார்.
