வாலிபர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்
திருப்பூர், ஜூலை 20- வாலிபர் சங்கத்தின் திருப் பூர் வடக்கு ஒன்றிய மற்றும் சிங்காநல்லூர் இடைக்க மிட்டி மாநாடுகளில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய மாநாடு, ஆத் துப்பாளையத்தில் ஞாயி றன்று, ஒன்றியத் தலைவர் ரேவந்த் குமார் தலைமை யில் நடைபெற்றது. துணைச் செயலாளர் நரேந்திர பிரசாத் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் ராம்கி துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலா ளர் சந்தோஷ் அறிக்கையை முன்வைத் தார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலைவராக ரேவந்த் குமார், செய லாளராக சந்தோஷ், பொருளாளராக நரேந் திர பிரசாத் உட்பட 15 பேர் ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் நிருபன் சக்ரவர்த்தி நிறைவுரை யாற்றினார். கோவை வாலிபர் சங்க கோவை மாவட்டம், சிங்க நகர 12 ஆவது மாநாடு. ஞாயிறன்று சௌரி பாளையத்தில் தோழர்கள் யு.கே.சிவஞா னம், சந்துரு ஆகியோர் நினைவரங்கில் நடை பெற்றது. நகரத் தலைவர் ஆர்.சனோஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஹெயில்மேரி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்து முருகன் துவக்கவுரையாற்றினார். நகரச் செயலாளர் எம்.மணிபாரதி, பொருளாளர் எம்.தியாகு ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாநில இணைச்செய லாளர் கே.எஸ்.கனகராஜ் சிறப்புரையாற்றி னார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலைவராக ஏ.ரெனித்குமார், செயலாளராக எம்.தியாகு, பொருளாளராக ஹெயில் மேரி உட்பட 11 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் எம்.விவேகானந்தன் நிறைவுரையாற்றினார். கே.மகேஸ்வரன் நன்றி கூறினார்.
கோவை, பீளமேட்டிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், ‘தாராவும் பறக் கும் செல்போனும்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பால சாகித்ய அகாதமி விருதாளள் உதயசங்கர், கவி ஞர் உமா மகேஷ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். நூலாசிரியர் மு.ஆனந்தன் ஏற்புரையாற்றினார்.