பரதநாட்டியம் மூலம் உலக சாதனை
நாமக்கல், ஆக.11- சுதந்திர தினத்தை முன்னிட்டு, பரதநாட்டியம் மூலம் உலக சாதனை படைத்த கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை வலியுறுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த தனியார் கல்லூரியில் பரதநாட்டிய விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழாவில், இந்திய வரைபடத்தை வரைந்து அதில் அனைத்து மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகை யில் மாணவிகள், கலாச்சார உடை அணிந்து, அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப இசைத்த பாடல்களுக்கு பரதம் ஆடினர். 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக் காக, தனியார் அமைப்பின் சார்பாக உலக சாதனை விருது வழங்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற விழாவில் திரைக் கலைஞம், சமூக ஆர்வலருமான பாலா கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சி, அங்கி ருந்த பலரையும் வெகுவாக கவர்ந்தது.