நிதிநிறுவன நெருக்கடியால் தொழிலாளி தற்கொலை
நாமக்கல், ஆக. 18 – குமாரபாளையத்தை சேர்ந்த நிதிநிறுவன நெருக்கடி காரணமாக விசைத்தறி தொழி லாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு கடி தம் எழுதி வைத்துவிட்டு தொழிலாளி, தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பாலக்கரையை சேர்ந்தவர் நாக ராஜ்(38). இவருக்கு மீனா என்ற மனைவி யும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். விசைத்தறி தொழிலாளியான நாகராஜ், தனது குடும்ப தேவைக்காக மகளிர் குழு மூலம் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் மனைவி மீனா பெயரில் 4 லட் சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இந் நிலையில் கடந்த மாதம் நிலுவை தொகையை செலுத்த சற்று தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள், நாகராஜுக்கு பணம் செலுத்து மாறு கடும் நெருக்கடி அளித்துள்ளனர். இத னால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ், இது குறித்து தனது மனைவியிடம் கூறி புலம் பியுள்ளார். இந்நிலையில் சரிவர வேலை இல்லாத தால் இந்த மாதத்திற்கு கடனுக்கான நிலுவை தொகை செலுத்த முடியாது என்பதால், தனது மரணத்திற்கு மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறு வன ஊழியர்களே காரணம் என்றும், தமிழக முதல்வர் உடனடியாக அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டதோடு, தனது குழந்தைகளுக்கு தனது இறப்பு குறித்து தெரிய வேண்டாம் என்றும் கூறி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு திங்களன்று காலை, நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளை யம் போலீசார், நாகராஜின் சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக குமார பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் விசைத்தறி தொழிலாளர் கள் கிட்னியை விற்பனை செய்வதும், தற் கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.