tamilnadu

img

மகளிர் விடியல் பேருந்து சேவை துவக்கம்

மகளிர் விடியல் பேருந்து சேவை துவக்கம்

நாமக்கல், ஜூலை 4- அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், மகளிர் விடியல் பேருந்து சேவைகளை அமைச்சர் மா.மதிவேந்தன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையங் களில், மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் மற்றும் புதிய நகரப் பேருந்துகளின் இயக் கத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பேருந்து நிலை யத்திலிருந்து பரமத்தி வேலூர் – திருச் செங்கோடு வரை மகளிர் விடியல் பயணப் பேருந்து, தடம் எண்:9A வழித்தடத்திற்கு புதிய நகரப் பேருந்து மற்றும் திருச்செங் கோடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச் செங்கோடு – பரமத்திவேலூர் வரை புதிய  வழித்தட மகளிர் விடியல் பயண பேருந்து  இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச் சியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கே.எஸ்.மூர்த்தி, போக்குவரத்துக் கழக நாமக்கல் பொது மேலாளர் த.மோகன்குமார், நாமக்கல் கோட்ட மேலாளர் பி.செங்கோட்டு வேலவன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.