ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
உதகை, ஜூன் 23- தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒரு வர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பங்களா பாடி அறக்காடு பகுதியை சேர்ந்தவர் சமிமா. இவருக்கு அப் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியும், அதனை மீட்டு தர கோரியும் பலமுறை கோத்தகிரி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இது தொடர்பாக பலமுறை மனு அளித்துள்ளார். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சி யர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். ஆனால் இந்த மனுவின் மீது எவ்வித விசாரணை மேற்கொள்ள வில்லை என தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் அளித்து வரும் மனுவின் மீது விசாரணை மேற்கொள்ளாத நிலையில், திங்களன்று இவர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது தரையில் அமர்ந்து தனது மனுவின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி னார். மேலும் தனது கையில் வைத்திருந்த மண்ணெண் ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க போவதாகவும் தெரி வித்தார். இதனை கண்ட போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் வசதி, கோரிக்கை
தருமபுரி, ஜூன் 23 – தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே பொது கழிப் பறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி அருகேயுள்ள குரும்பட்டி டீக் கடை கிராமத்தில் தருமபுரி அரசு பொறியி யல் கல்லூரி அமைந்துள்ளது. இதன் அரு கில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியும் உள்ளது. தருமபுரி-அரூர் சாலை யில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மற்றும் பள்ளிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தருமபுரி மற்றும் பிற ஊர்க ளில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரு மபுரி மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல இந்த அரசு பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத் திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத் திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், பெண்கள் மற்றும் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதே போல், குடிநீர் வசதி இல்லாததால் தாகத்தால் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, பேருந்து நிறுத்தம் அரு கில் உள்ள காலி இடத்தில் இலவச பொது கழிப்பறை மற்றும் ஒகேனக்கல் குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
முதாட்டி கொலையில் ஒருவர் கைது
நாமக்கல், ஜூன் 23 – நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத் துள்ள பாதரையில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எதிர் வீட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட் டார். பள்ளிபாளையம் பாதரை மாரியம்மன் கோவில் குடி தெரு பகுதியில் தனியே வசித்து வருபவர் கண்ணம்மாள் (80). இவர் சமீபத்தில் நகைக்காக கொலை செய்யப்பட் டார். இதனையடுத்து, கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில், இறந்த மூதாட்டியின் வீட்டின் எதிர் வீட்டில் குடி யிருக்கும் சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அத்தனூர் பகு தியை சேர்ந்த சங்கர் என்பவர் கண்ணம்மாள் வசிக்கும் எதிர் வீட்டில் வசிப்பதும், அவர் வீட் டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்ப டுத்தி நகையினை பறிக்கும் நோக்கில், மூதாட்டியை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.