tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மெமு ரயில் பெட்டியில் ஒழுகிய தண்ணீர்

கோவை, ஆக.23- கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் பயணிகள் மெமூ ரயில் பெட்டியில் தண்ணீர் ஒழுகிய வீடியோ  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து நவீன  படுத்தப்பட்ட மெமூ மின்சார பயணிகள் ரயில் மேட்டுப்பாளை யத்திலிருந்து, கோவை மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு தின சரி தலா 5 முறை இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் தான்  பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர், வியாபாரிகள், என பயணம் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சனியன்று காலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு  புறப்பட பயணிகள் ரயில் தயாராக இருந்தது. பயணிகளும் ரயிலில் ஏற துவங்கினர். அப்போது ஒரு பெட்டியின் மேல் பகுதி யில் இருந்து தண்ணீர் கீழே கொட்டி கொண்டிருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். இதனை பயணிகள் சிலர் வீடியோ எடுத்து மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோவைக்கு குளித்து கொண்டே பயணிக்க லாம் என்ற கமெண்டுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரயில் பெட்டியின் மேலே கழிவறைக்கு செல் லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கொட்டி வருவதாக தெரிவித்த மேட்டுப்பாளையம் ரயில்வே நிலைய அலுவலர் கள் விரைவில் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல்: விவசாயிகள் குற்றச்சாட்டு

உதகை, ஆக.23- நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட் களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவல கத்தில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது, நீல கிரியில் காய்கறிகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கு அதீத ர சாயன பயன்பாடு உள்ளது. அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிக் கல்கள் உள்ளது. கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்தை தாண்டி இங்கு வரு வதை தவிர்ப்பதால் இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதே போல் வனவிலங்குகள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றனர். தொடர்ந்து பேசிய ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீலகிரி  மாவட்டம் போன்ற மலைப்பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த உயர் தொழில்நுட்பங்களான ட்ரோன், பூம் ஸ்ப்ரேயர் போன்றவை மிகவும் பயனுள்ளதாக அமையும். கூடலூரில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதங்க ளுக்கு கால தாமதமின்றி நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஷிப்லா மேரி உட் பட பலர் கலந்து கொண்டனர்‌.

ராயல் கேர் மருத்துவமனையின் கருவறை காவியம்

கோவை, ஆக.23– ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கர்ப் பிணிகளுக்கு உதவும் வகையில் “கருவறை காவியம்” என்ற தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.  ராயல் கேர் மருத்துவமனை கருவறை காவியம் என்கிற சிறப்பு திட்டத்தை துவக்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், அனுப வம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் குழு, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள், தொடர் பரிசோதனைகள் மற்றும் பிரசவ சேவைகளை வழங்க உள்ளனர். சமூக மற்றும் பொருளாதார ரீதி யாக பின்தங்கியுள்ள கர்ப்பிணிகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் டாக்டர் க. மாதேஸ்வரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறு கையில், பிரசவத்திற்கான சிறப்புத் தொகுப்பு சேவைகளும் அறி விக்கப்பட்டுள்ளன, சுகப்பிரசவம்: ரூ. 15,000, சிசேரியன் பிரச வம்: ரூ.25,000, நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை மற்றும் காந்திபுரத்தில் உள்ள ராயல்  கேர் சிட்டி யூனிட் ஆகிய இரண்டு கிளைகளிலும் இந்தச் சேவை கள் கிடைக்கும். மருத்துவமனையில் அதிநவீன பிரசவ அறை கள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மற்றும் 24  மணி நேர அவசர சிகிச்சை வசதிகள் உள்ளன, என்றார். கூடுதல்  விவரங்களுக்கு, 90878 77977 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.