வால்வோ புதிய மின்சார கார்
கோயம்புத்தூர், அக்.4- வால்வோ கார் இந்தியா அதன் மிகவும் நிலையான மற்றும் ஸ்டைலான மின்சார காரான வால்வோ இ.எக்ஸ்.30 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.41 லட்சம் ஆகும். இந்தப் பண்டிகைக் காலத்தில், வால்வோ கார் இந்தியா, அதன் டீலர்களுடன் இணைந்து, அக்டோபர் 19க்கு முன் இந்த EX30 காரை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ. 39,99,000க்கு வழங்குவதன் மூலம் கூடுதல் சலுகையை அளிக்கிறது. இந்தக் கார் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது, நவம்பர் 2025 முதல் வாரத்திலிருந்து இந்த கார்கள் டெலிவரி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டீலர்ஷிப்பை அணுகலாம். வால்வோ கார்களின் மூன்றாவது EV மாடலான இது, பெங்களூருவின் ஹோசகோட்டேயில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு EX30 காருடன் 11-kW சார்ஜர் சலுகையாக வருகிறது என்று நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறினார்.
