விதிமீறல்: ரூ.6.18 கோடி அபராதம் வசூல்
சேலம், ஜூலை 5- பயணச்சீட்டின்றி பய ணத்தவர்கள் உட்பட பல் வேறு விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 3 மாதங் களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ.6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் களில் பயணச்சீட்டு இன்றி யும், முறைகேடாகவும் பய ணம் செய்யும் நபர்களை பயணச்சீட்டு பரிசோதகர்கள் பிடித்து அபராதம் வசூ லித்து வருகின்றவர். இந்நி லையில், தெற்கு ரயில்வே குட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடத்தப் பட்ட சோதனையில் பயணச் சீட்டு இன்றி பயணித்தது தொடர்பாக 43,524 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.79 கோடி அபராதம் வசூ லிக்கப்பட்டது. அதேபோல், முன்பதி வில்லா பயணச்சீட்டு எடுத் துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச் சீட்டு வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் பய ணித்தது தொடர்பாக 40,563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.37 கோடி அபராதம் வசூலிக்கப்பட் டது. மேலும், ரயில்களில் விதி முறைகளை மீறி அதிக பாரம் எடுத்துச்சென்றதாக 208 வழக்குகள் பதியப்பட்டு ரூ.1,04,833 அபராதம் விதிக் கப்பட்டது. கடந்த 3 மாதங் களில் 84,295 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ.6.18 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.