குறுக்குப்பாறையூர் விவசாயிகளுக்கு ஆதரவாக கிராம மக்களும் போராட்டம்
சேலம், ஆக.20- குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத் திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூ ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட, குறுக் குபாறையூரில் இடம் தேர்வு செய்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன்காரணமாக 2 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப் பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் துவங்கப் பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திரளான விவசாயிகள் குறுக்கு பாறையூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, குறுக்குப்பாறையூரில் 65 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பச்ச பாலியூர், கல்லம்பாளையம் பகுதி பொதுமக்களும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.