tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வீரிய ஒட்டு ரக பயிர் பயன்பாடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பாபநாசம், செப்.2 - தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்கு நர் சுஜாதா, விதை ஆய்வாளர் சுரேஷ் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விளைச்சலை அள்ளித் தரும் வீரிய  ஒட்டு ரகங்கள் மக்காச் சோளம், பருத்தி மற்றும்  தக்காளி, கத்தரி, மிள காய் ஆகிய காய்கறி களை பயிர் செய்யும் விவ சாயிகள் அதிகளவில் மகசூல் பெறுவதற்கு பெரும்பாலும் வீரிய  ஒட்டு ரகங்களையே பயன் படுத்தி வருகின்றனர். வீரிய ஒட்டு மக்காச் சோளம், பருத்தி மற்றும் காய்கறிகள் ரகங்களைப் பொறுத்தவரை, பெரு மளவில் தனியார் ரகங்க ளாக உள்ளன. இவை பெரும்பாலும் உண்மை நிலை விதைகளாக உள்ளதால், உண்மை நிலை அட்டையில் உள்ள ரகம், காலாவதி நாள், முளைப்புத் திறன் ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வீரிய ஒட்டு ரகங் களைப் பயிர் செய்யும்  போது, ஒவ்வொரு முறை யும் புதிதாக விதைகளை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் முந்தைய பயிரில் எடுத்த விதை களை, அடுத்த முறை பயன்படுத்தும் போது, பயிர் ஒரே சீராக இல்லா மல், இரு வேறு பெற்றோ ரின் பண்புகள் வெளிப் பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். அதேபோல் தனியார் ரகங்களை தேர்வு செய் யும் போது, அந்த ரகங்கள் தமிழ்நாடு அர சின் விதைச் சான்றளிப்பு  மற்றும் உயிர்மச் சான்ற ளிப்புத் துறையினால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். வீரிய ஒட்டு ரகங் களைப் பயன்படுத்தும் போது மேற்குறிப்பிட்ட விபரங்களை சரிபார்த்து விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள வேண் டும். தற்போது காய்கறி சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு தேவை யான வீரிய ஒட்டு ரக  காய்கறி நாற்றுக்களை ஆர்டரின் பேரில், அவ ரவர் பகுதி முன்னோடி விதை விற்பனை நிலை யங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.”  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உழவன் எக்ஸ்பிரஸ்  13 ஆம் ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர், செப்.2-  தஞ்சாவூரிலிருந்து மெயின் லைன் வழியாக மீட்டர் கேஜ்  பாதையில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் பணி தொடங்கியதும் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மெயின் லைன் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் சென்னைக்கு ரயில் இயக்கப் படவில்லை. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள், பொதுமக்கள் தன்னார்வ அமைப்பினர் என பல தரப்பின ரும் புதிய ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். இதனடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்.1ஆம்  தேதி தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு உழவன் விரைவு  ரயில் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப் பட்டது. இந்த ரயில் தொடங்கப்பட்ட நாள் முதல் தினமும் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகளும், படுக்கை வசதி களும் நிரம்பி வருகிறது. பல தரப்பினருக்கும் மிகவும் பயனு உள்ளதாக இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை இரவு தஞ்சா வூர் ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.  அப்போது உழவன் விரைவு ரயிலின் சேவையை போற்றும்  விதமாக கேக் வெட்டியும், உழவன் ரயிலின் ஓட்டுநர்களுக்கு  பொன்னாடை போர்த்தியும், ரயில் பயணிகளுக்கு இனிப்பு களும் வழங்கப்பட்டன. இதில் தஞ்சாவூர் ரயில் உபயோகிப் பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடியில் வட்டார அளவிலான மன்ற போட்டிகள்  

அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு  உட்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் இருந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான மன்ற போட்டிகளை மணமேல்குடி அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா னந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய மன்றம் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், கட்டுரை  எழுதுதல் மற்றும் வினாடி-வினா, சிறார் திரைப்படம், ஒளிப் பதிவு மற்றும் திரை விமர்சனம், கதை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. வட்டார அளவிலான போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர். இப்போட்டியா னது மாணவர்களின் இலக்கிய திறனையும் மொழித்திற னையும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. போட்டியில் நடுவர்களாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்பட்டனர்.