tamilnadu

img

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

உதகை, அக்.5- ஆண்டு நிலுவைத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும் என அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கத்தின் நீலகிரி  மாவட்ட 7 ஆவது பேரவைக் கூட்டம்  ஞாயிறன்று நடைபெற்றது. உதகை யிலுள்ள ஓம் சக்தி மண்டபத்தில் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவிதா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர்  எல்.சங்கரலிங்கம் துவக்கவுரையாற்றி னார். சிஐடியு மாவட்ட நிர்வாகி சுந்தரம் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சசிகலா, பொரு ளாளர் சந்தியா ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாநிலச் செய லாளர் சித்ரா சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் களை மதியம் 2 மணிக்கு அழைத்து கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களை வனவிலங்குகள் சூறை யாடுவதால், பொருட்கள் சேதமாகி வரு கின்றன. மேலும், பாதுகாப்பற்ற சூழ் நிலை நிலவும் நிலையில், உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு நிலு வைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலை வராக கவிதா, செயலாளராக சசிகலா,  பொருளாளராக பூங்குழலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், விஜயா நன்றி கூறினார்.