சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்
மருத்துவப்படிற்கு தேர்வான சுமைப்பணி தொழிலாளியின் மகள்
சேலம், ஆக.19- சுமைப்பணித் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ரயில்வே ஏற்றுமதி, இறக்கு மதி தொழிலாளர்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. சேலம் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) 41 ஆவது ஆண்டுப் பேரவை, திருவாக்கவுண்டனூர் நெடுஞ்சாலை பகுதியிலுள்ள ஜீ.வி.என் திருமண மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை டி.பெரியசாமி ஏற்றி வைத்தார். சங்கத்தின் தலை வர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். சங்கத்தின் உதவிச்செய லாளர் கே.எம்.மாரிமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். உதவிச் செயலாளர் பி.சங்கர் வரவேற்றார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பி.பன்னீர்செல்வம் துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் செயலா ளர் ஏ.கோவிந்தன், பொருளாளர் பி. சக்திவேல் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ். திருப்பதி வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண் டும். பணிப் பாதுகாப்பு, முறையான கூலி வழங்க வேண்டும். பணியாற் றும் இடத்தில் சுகாதாரமான கழி வறை, குளியலறை மற்றும் ஓய் வறை அமைக்க வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக ஆர்.வெங்கடபதி, செயலாளராக ஏ.கோவிந்தன், பொருளாளராக பி.சக்திவேல், உத வித்தலைவர்களாக ஆர்.சர வணன், எம்.சுதாகர், கே.எம்.மாரி முத்து, உதவிச்செயலாளர்களாக பி.சங்கர், ஏ.முனுசாமி, குபேந்திரன் உட்பட 14 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் நிறைவுரையாற்றி னார். மதியழகன் நன்றி கூறினார்.
மருத்துவப்படிற்கு தேர்வான சுமைப்பணி தொழிலாளியின் மகள்
சேலம் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்கத் தில் 35 ஆண்டு காலமாக இருப்ப வர் சுந்தர். இவரது மகள் எஸ். மகாலட்சுமி, நீட் தேர்வில் வெற்றி பெற்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் தனது மருத்துவப் படிப்பை தொடரவுள் ளார். இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி மகாலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகை யில், சங்கத்தின் ஆண்டுப் பேரவையில் பாராட்டு தெரிவிக் கப்பட்டது. சுமைப்பணி தொழிலா ளர் சம்மேளன தலைவர் ஆர். வெங்கடபதி நினைவுப்பரிசு வழங்கினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாணவி யின் தந்தை சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.