கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 23- கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்திற்கு வரும் 1 ஆம் தேதி முதல் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறக்க கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையா ளர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி வழியாக முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், கீழ் பவானி பாசனத்தில் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண் ணீர் திறக்கப்படும். தற்போது தென்மேற்கு பருவமழை சாதக மாக இருப்பதால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப் படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கரும்பு, மஞ் சள், வாழை, மரவள்ளி மற்றும் தென்னை போன்ற பயிர்கள் வறட்சியின் காரணமாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் அபாயமாகும். இந்நிலையில் அணையில் தண்ணீரின் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஒற்றைப்படை, இரட்டைப்படை மதகுகள் வழியாக சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் வழங்க வேண்டும். தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நீர்வளத் துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.