tamilnadu

img

அரசின் திட்டத்தை உறுப்பினர்களிடம் எடுத்துக் கூற டீமா சங்கத்திற்கு ஒன்றிய ஜவுளித்துறை அறிவுரை

அரசின் திட்டத்தை உறுப்பினர்களிடம் எடுத்துக் கூற  டீமா சங்கத்திற்கு ஒன்றிய ஜவுளித்துறை அறிவுரை

திருப்பூர், செப்.6 - திருப்பூர் பின்னலாடை சிறு, குறு தொழில்  துறையினருக்கு கடனுதவி உள்ளிட்ட நிவா ரணம் கோரி திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும்  உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்ததற்கு, நிதி அமைச்சகம் பரிசீ லிப்பதாகவும், அரசின் திட்டம் குறித்து சங்க  உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறும்படியும் பதில் அனுப்பி உள்ளனர். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறு, குறு, நடுத்தர ஆடைத் தொழில் துறையினருக்கு கடன் வழங்கும் விதிமுறைகளை தளர்த்த  வேண்டும் என டீமா சங்கம் ஒன்றிய ஜவு ளித் துறைக்குக் கடிதம் எழுதியிருந்தது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின்  நிதிச் சேவைகள் பிரிவில் கலந்தாலோசிக்கப் பட்டது. நிதி சேவைத் துறை தெரிவித்த விபர மாவது: டீமா மற்றும் சிட்பி வங்கி முன்மொ ழிந்திருக்கும் விசயங்களை பரிசீலனை செய்து, ஜவுளி மற்றும் ஆடைத் துறையில்  நடைமுறை மூலதன சிக்கல்களைத் தீர்ப்ப தற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காண இந்திய வங்கிகள் சங்கத் திடம் கூறப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் (CGTMSE) ரூ.10 கோடி வரையிலான கடன்  உத்தரவாதத் திட்டத்தை உகந்த முறையில்  பயன்படுத்தும் வகையில் சங்கத்தின் உறுப்பி னர் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்துமாறு டீமாவிற்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.