பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், செப். 6- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 122 விவசாயிகள், 44 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். ஏலத்தில் 8 வணிகர்கள் கலந்து கொண்டு, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,829, குறைந்தபட்சம் ரூ.6,699, சராசரி ரூ.7,407 என விலை நிர்ணயித்தனர். இதன் மதிப்பு ரூ 32.23 லட்சம்.
சாலை விபத்து: மாமன்ற முன்னாள் உறுப்பிதஞ்சாவூர், செப். 6- தஞ்சாவூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜி.அருளழகன் (49). இவர் 2011-16 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமமுக மாநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலராக இருந்து வந்தார். இவர் காரில் ஆற்றுப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியிலுள்ள சாலை நடுத்தடுப்பில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருளழகன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து, நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.னர் பலி