tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சேலம், ஆக.21- அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களின் காத்திருப்புப் போராட்டம், வியாழனன்று 4  ஆவது நாளாக தொடர்ந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதி யாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உட்பட  மாநிலம் முழுவதும் வியாழனன்று 4 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

ஆற்றுக்குள் குதித்த இளைஞருக்கு அறிவுரை

மேட்டுப்பாளையம், ஆக.21- மேட்டுப்பாளையம் பவானியாற்று பாலத்திலி ருந்து ஆற்றுக்குள் குதித்த இளைஞரை போலீசார் அழைத்து வந்து எச்சரித்து அறிவுரை வழங்கினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும்  பவானியாற்றில் பல அடி உயரம் கொண்ட பாலத்தின்  தடுப்புச்சுவர் மீது ஏறி நின்று கொண்டு, தீயணைப்பு துறை  வீரர்கள் தடுத்ததையும் மீறி ஆபத்தான முறையில் ஆற்றி னுள் குதித்தார். இதுகுறித்த காணொலி சமூக வலைத ளங்களில் வைரலானது. ஆற்றினுள் குதித்த இளைஞர்  நல்வாய்ப்பாக நீந்தி கரையேறி விட்டாலும் காண் போரை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் வெளி யான நிலையில், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளை யம் போலீசார் விசாரித்தனர். அதில், ஆற்றில் குதித்த  இளைஞர் ஓடந்துறை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19)  என்பது தெரியவந்தது. இதனையடுத்து தொடர்புடைய இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை மேட்டுப் பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்த காவல் ஆய் வாளர் சின்னகாமணன், ஆகாஷிற்கு அவரது ஆபத் தான செயல் மற்றும் இதன் பின் விளைவுகள் குறித்து  அறிவுரை வழங்கியதோடு, எதிர்காலத்தில் இது போன்ற  செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்து அனுப்பி வைத்தார்.

விளை நிலங்களில் தேங்கிய வெள்ள நீர்!

சேலம், ஆக.21- காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் விளை நிலங்களுக்குள் வெள்ள நீரில் பயிர்கள் மூழ்கின. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால், தேவூர் அருகே  உள்ள காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், காவேரிபட்டி  அக்ரஹாரம் ஊராட்சி மதிகிழான் திட்டு, மணக்காடு  பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பருத்தி, சோளம்,  மஞ்சள், தென்னை, மக்காச்சோள விளை நிலங்களில்  வெள்ளநீர் சூழ்ந்து, பயிர்கள் நீரில் முழ்கின. அதேபோல,  கொட்டாயூர், ஆத்துக்காடு பகுதிகளில் உள்ள  பெரியாண்டிச்சியம்மன், விநாயகர் கோவில் மற்றும்  காவேரிப்பட்டி பரிசல் துறை பகுதியில் உள்ள செம்முனி சாமி உள்ளிட்ட கோவில்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.  எனவே, காரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு செல்லுமாறு வருவாய், காவல் துறை யினர் எச்சரித்து வருகின்றனர்.

கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி

கோவை, ஆக.21- கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து சீரான தால். வெள்ளியன்று முதல் அருவியில் குளிக்க வனத்துறை யினர் அனுமதித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியில் குளிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து  செல்கின்றனர். கடந்த ஞாயிறன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம்  சூழல் சுற்றுலா மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்த னர். இதனால் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை  விதிக்கப்பட்டிருந்தது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரங்களில் பெய்த மழை காரணமாக அருவியில் நீர் வரத்து  அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை  பொழிவு இல்லாததாலும், அருவிக்கு வரும் நீர்வரத்து சீரான தாலும், வெள்ளியன்று முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா பொதுமக்கள் வருகைக்கு திறக்கப்படும் என வனத் துறையினர் அறிவித்துள்ளனர். 4 நாட்களுக்கு பின் மீண்டும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.