tamilnadu

img

விடுமுறை நாளிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

விடுமுறை நாளிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

கோவை, ஆக.27- விடுமுறை நாளிலும் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 ஆம் தேதியன்று முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 10 ஆவது நாளான புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி, விடுமுறை நாளிலும் கோவை சுங்கம் அரசு பேருந்து பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழக அரசு உடனடியாக போக்குவரத்து ஊழியர்களை அழைத்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். முன்னதாக சுங்கம்  அரசு பேருந்து பணிமனை முன்பு ஓய்வூதியர்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் அருணகிரிநாதன் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.