திருப்பூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்
திருப்பூர், ஆக. 30 - அரசுப் போக்குவரத்து தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பினர் கோரிக்கைகளை வலி யுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலை யில், 13ஆம் நாளான சனியன்று கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பு (சிஐடியு ரேவா) இணைந்து ஊதிய உயர்வு நிலுவை, பிடித்தம் செய்த பணத்தை வழங்கு வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திருப்பூர் காங்கேயம் சாலை மண்டலப் போக்குவரத்து அலு வலகம் முன்பாக தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு போராடும் தொழி லாளர்களுக்கு உணவு மறுக்கும் நிர் வாகத்தைக் கண்டித்து தொழிலாளர் களிடம் பிடித்து வைத்த பணத்தைத் திரும்ப வழங்கக் கோரி திருப்பூர் பணி மனை முன்பாக கஞ்சி தொட்டி திறக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திருப்பூர் மண் டல தலைவர் பி.செல்லதுரை, பொதுச் செயலாளர் கொங்கு ராஜ், பொருளாளர் மனோகரன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் டி. துரைசாமி, செயலாளர் ஜான் பாலி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர் கள் பங்கேற்றனர். சனியன்று நடந்த தொடர் காத்தி ருப்புப் போராட்டத்திற்கு மண்டல துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். பொதுத் தொழிலாளர் சங்கத் துணைத் தலை வர் என்.பாலு துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி முன்னாள் மண்டல துணைப் பொதுச் செயலா ளர் வே.விஸ்வநாதன், உடுமலை பாபு, தாராபுரம் ரேவதி, சிஐடியு ரேவா அமைப்பின் மாணவமணி, உடுமலை பகவதி, சுந்தரம், பொன் னுசாமி, என்.சுப்பிரமணி உள்ளிட் டோர் போராட்டத்தை விளக்கிப் பேசி னர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் உரையாற்றி னார்.