tamilnadu

img

ஒரு மாதமாக தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

ஒரு மாதமாக தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

கோவை, செப்.16- அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் காத்திருப் புப் போராட்டம் 30 நாளை எட்டியது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தப்படி நிலுவைத் தொகை வழங்குவது, ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 18 ஆம் தேதியன்று முதல் மண்டல தலைமை அலுவலகங்களில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அமைப்பினர் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வா யன்று அவர்களின் போராட்டம் 30 ஆம் நாளை எட்டியது. கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சம்மேளன துணை பொதுச் செயலாளர் எம்.கனகராஜ் மாவட்டச் செயலாளர் எம்.வேளாங்கண்ணி ராஜ், மாவட்டத் தலைவர் ஆர். லட்சுமி நாராயணன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எம்.அருணகிரிநாதன்,  சுரேந்திரன்,  முத்துச்சாமி உள் ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.  ஈரோடு ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலை வர் பி.ஜெகநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மண்டல பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, பன்முகத் தலைவர் என்.முருகையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாஸ்மாக் ஊழியர் சங்கம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.