tamilnadu

img

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழி யர், ஓய்வுபெற்றோர்களின் கோரிக்கைகளை தீர்க்கக் கோரி தருமபுரி மாவட்டத்தில் அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி, செயலாளர் எம்.பெருமாள், பொருளாளர் கே.கேசவன், அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் ஏ.மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.