கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பொள்ளாச்சி, செப்.6- ஆழியாறு பூங்கா மற்றும் கவியருவி ஆகிய சுற்றுலாத் தலங்களில் ஓணம் மற்றும் மிலாது நபி விடுமுறையொட்டி சுற்றுலாப் பயணி கள் வருகை அதிகரித் துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை செல்லும் பிரதான சாலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கவியருவி மற்றும் ஆழியார் அணை பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகளை காப்பக பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆழியார் அணைக்கு வரும் வழியில் வால்பாறை சாலையில் உள்ள கவியருவி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையையொட்டி சனியன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆழியார் பூங்கா மற்றும் கவியருவிக்கு வந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கவியருவியில் நீர் வரத்து சீராக உள்ளது. இயற்கை அழகுடன் ரம்யமாக காட்சியளிக்கும் கவியருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.