யானைகள் முகாமில் சுற்றுலாப் பயணிகள்…
உதகை, செப்.14- முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பரா மரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை புகைப்படம் எடுத்து சுற்றுலாப் பயணி கள் மகிழ்ந்தனர். வார விடுமுறையான ஞாயிறன்று நீலகிரிக்கு சுற்று லாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளைக் காண, அண்டை மாநிலங்களான கேரளம், கர் நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங் களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணி கள் அதிகளவில் குவிந்தனர். உணவு மாடத் தில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நின்ற நிலையில், ஆஸ்கர் குறும்படத்தில் இடம் பெற்றிருந்த ரகு, பொம்மி உட்பட வளர்ப்பு யானைகளுக்கு பாகன்கள் கரும்பு மற்றும் சத்தான உணவுகள் வழங்கியதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். அதேபோல் உதகை அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்று லாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது இத மான கால நிலை நிலவுவதால், அதை அனுபவித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாக மடைந்தனர்.