tamilnadu

திருப்பூர் மாநகராட்சி குப்பையை முதலிபாளையம், இடுவாய் கிராமங்களில் மேலாண்மை செய்ய முடிவு

திருப்பூர் மாநகராட்சி குப்பையை முதலிபாளையம், இடுவாய் கிராமங்களில் மேலாண்மை செய்ய முடிவு

திருப்பூர், அக்.24- திருப்பூர் மாநகராட்சியில் சேகரமா கும் குப்பையை, முதலிபாளையம் மற் றும் இடுவாய் கிராமங்களில் உள்ள  இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கொடுக்கும் அறிக்கையின் அடிப்படை யில் சேகரித்து மேலாண்மை செய்ய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  திருப்பூர் மாநகராட்சி மாமன்ற அவ சரக் கூட்டம் வெள்ளியன்று மேயர் ந. தினேஷ்குமார் தலைமையில் ஆணை யாளர் எம்.பி.அமித், துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், திருப்பூர் மாநக ராட்சி குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண் பது குறித்து, மேயர் தினேஷ்குமார் தீர் மானத்தை முன்மொழிந்து கூறியதா வது: முதலிபாளையம் பகுதியில் செயல்படாத பாறைக்குழியில் மாநக ராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி வேலுச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நீதி பேராணை மனுவின் மீது கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.  மேலும் இந்த வழக்கில் அக்டோபர் 17ஆம் தேதி விசாரணையின் போது,  முதலிபாளையம், இடுவாய் கிராமங்க ளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்க ளில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணை யம் (எஸ்.இ.ஐ.ஏ.ஏ) மற்றும் மாவட்ட சீர மைப்பு, புனரமைப்பு மீளாக்க குழு உள் ளிட்ட அமைப்புகள் வழங்கும் உரிய வழி காட்டுதல்களை பெற்று மாநகராட்சி நிர் வாகம் குப்பை மேலாண்மை பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முதலிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழிகளில் 17.43  ஏக்கர் பரப்பளவில் நீண்ட கால குத்தகை  அடிப்படையில் பயன்படுத்தவும், இடு வாய் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந் தமான 4.15 எக்டேர் பரப்பளவு இடத்தில்  குப்பைகளை தற்காலிகமாக சேகரித்து  வைப்பதற்கும் உரிய முன்னேற்பாடு கள், தேவையான கட்டமைப்பு வசதிகள்  செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இடுவாய் கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபாட்டை தவிர்க்க, குப்பை வைக்கப்படும் பகுதியில் நீர்  புகாத உரை இடுவதுடன் கசிவு நீர் ஓடா மல் தடுக்கவும், நிலத்தைச் சுற்றி சுவர்  அல்லது தடுப்பு வேலி அமைக்கவும், மேற்குப் பகுதியில் இருக்கும் நீர்  பாசன கால்வாய் பகுதிக்கு குப்பையில்  இருந்து கசிவுநீர் போகாமல் நீர் தடுப்பு  அரண் அமைக்கவும் படும்.  நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக் கையின் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு  மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்று மேயர் தினேஷ்குமார் கூறினார்.  இதன் மீது அதிமுக, இந்திய கம்யூ னிஸ்ட், பாஜக, காங்கிரஸ், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப் பினர்கள் தீர்மானத்திற்கு ஏற்பு தெரி வித்து பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மணி மேகலை கூறும்போது, மக்களை பாதிக் காதவாறு இப் பிரச்சனையில் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று கூறினார்.  திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்சனை தீராத தலைவலியாக நீடிக் கும் நிலையில், இப் பிரச்சனைக்கு உரிய, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  அதேபோல் திருப்பூர் மாநகராட்சி யின் 60 வார்டு பகுதிகளில் குப்பை சேக ரிப்பு பணிக்கு சீனிவாஸ் திடக்கழிவு மேலாண்மை (எஸ்.டபுள்யு.எம்.எஸ்)   நிறுவனத்திற்கு மூன்றாம் ஆண்டாக 2026 ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஒப்பந்த  காலத்தை நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4621/-வீதம் வழங்க தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிறுவனத்திற்கு ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி கொடுத்தா லும், அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பி னர்களும் திடக்கழிவு அகற்றுவதில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டை கடு மையாக விமர்சித்து பேசினர். இதை யடுத்து, இந்நிறுவனத்தின் செயல் பாட்டை பொறுத்து ஒப்பந்தத்தை ரத்து  செய்வதற்கு மாமன்றம் முடிவு செய்ய லாம் என்று மேயர் தினேஷ்குமார் கூறி னார்.

திருப்பூர் மாமன்றத்தில் தினமலருக்கு கண்டனம் திருப்பூர் மாமன்றக் கூட்டத்தில், தினமலர் நாளிதழுக்கு அதிமுக, இந்திய  கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்  கடும்  கண்டனம் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு கவுன்சிலர்களுக்கு கவனிப்பு  என்று டீக்கடை பெஞ்ச் பகுதியில் தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. கட்சி  வித்தியாசம் இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் ரூ.3 லட்சம் வரை கவ னிக்கப்பட்டதாக எழுதியிருந்தது. இதற்கு அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்க ளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துப் பேசினர். மேயர் தினேஷ்குமார் பேசும் போது, எவ்வித ஆதாரமும் இல்லாமல்  தினமலர் நாளிதழ் திரைக்கதை போல  செய்திகளை எழுதுவது கண்டனத்திற்குரியது. மாமன்றத்தின் சார்பில் கண்ட னத்தை பதிவு செய்கிறேன் என்றார். மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் மணிமேகலை தினமலர் ஆசிரியருக்கு  கண்ட னம் தெரிவித்து மறுப்புக் கடிதத்தை நேரில் கொடுத்திருக்கிறார். முதல்வருக்குப் பாராட்டு உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவுத் திட்டத்தை தொடங்கியிருக்கும் மாநில முதல்வருக்கு திருப்பூர் மாமன்றத்தின் சார்பில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.