எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மூவர்
கோபி, ஆக.4- கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தாழை கொம்புதூரில், தகரக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத் தில் சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 6 சவரன் தங்க நகைகள் எரிந்து நாசமாகின. தீ விபத் தின் போது வீட்டில் இருந்த முதியவர் மற்றும் இரண்டு சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தாழைகொம்புதூரைச் சேர்ந்த ராமசாமி - கந்தம் மாள் தம்பதியரின் மகன் பூவேந்திரன், அவரது மனைவி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு மகன்களு டன் அதே பகுதியில் தனித்தனியாக தகரக் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமை (04.08.2025) கந்தம் மாள் மற்றும் பூவேந்திரன் அவரது மனைவி ஆகியோர் கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ராமசாமி தனது மனநலம் பாதிக்கப்பட்ட பேரக்குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மாலை யில் ராமசாமியின் தகரக் கொட்டகையிலிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அங்கு சென்றுள்ளனர். வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள், கூச்சலிட்டு ராமசாமி மற்றும் அவரது பேரக்குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றினர். அதற்குள் தீ மளமளவென பரவிக்கொண்டிருந்தது. பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தபோது, வீட் டில் இருந்த இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அச்சம டைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக கோபி தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர் கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியால், முதியவரும் சிறுவர்களும் எவ்வித காயமும் இன்றி தப்பி னர். தீ விபத்தில், பீரோ, கட்டில், வீட்டு உபயோகப் பொருட்கள் என சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட் களும், ரூ. 2 லட்சம் பணமும், 6 சவரன் தங்க நகைகளும் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.